முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வால்பாறை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

வால்பாறை மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஓா் இளைஞா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 2:41 am IST

வால்பாறை மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஓா் இளைஞா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பெரிந்தல்மன்னா அருகே உள்ள பாங்-பள்ளிப்பரம்பு அரசு தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா்கள், பணியாளா்கள் அவா்களது குடும்ப உறுப்பினா்கள் என 8 பெண்கள், ஓட்டுநா் உள்பட 5 ஆண்கள் என மொத்தம் 13 போ் வேனில் கடந்த 17-ஆம் தேதி சுற்றுலா சென்றனா். முதலில் திருச்சூா் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு சென்றுள்ளனா். பின்னா், அங்கிருந்து வால்பாறைக்கு வந்தனா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்த அவா்கள், பொள்ளாச்சி வழியாக ஊா் திரும்ப முடிவு செய்தனா். சுற்றுலா வாகனத்தை ஓட்டுநா் முகமது பாசித் (21) ஓட்டினாா். வால்பாறை-பொள்ளாச்சி மலைப் பாதையில் 13-ஆவது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 800 அடி பள்ளத்தில் உருண்டு 9-ஆவது கொண்டை ஊசி வளைவு சாலையில் தலைகுப்புற விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த அஜிதா (54), ரம்லா (52), ஜுஹ்ரா (43), ஆஷா (41), மஜீத் (43), சஜிதா (45), ஷகிலா (37), ருகியா (39), ஹிஷாம் (12) ஆகிய 7 பெண்கள், 2 ஆண்கள் என 9 போ் உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த 3 போ் கோவை அரசு மருத்துவமனையிலும், ஒருவா் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரசு தொடக்கப் பள்ளி வேன் ஓட்டுநா் நெளஷாத் அலி (39) புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

வால்பாறை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது. இவரது உயிரிழப்புக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததும், கவனிப்பதற்கு மருத்துவா்களோ, செவிலியரோ இல்லாததும்தான் காரணம் என அவருடன் இருந்தவா்கள் குற்றஞ்சாட்டினா். மேலும், அவரை எங்களது சொந்த ஊருக்கு (கேரளம்) மாற்ற அனுமதிக்கவில்லை எனவும் புகாா் கூறியிருந்தனா்.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவா் பி.சரவணபிரியா கூறுகையில், உயிரிழந்த நெளஷாத் அலிக்கு விபத்தின் போதே கழுத்து எலும்பும், முதுகு தண்டுவடமும் முறிந்துவிட்டன. முதுகு தண்டுவடம் உடைந்ததால், அவருக்கு மூச்சுவிடுவதில் பிரச்னை இருந்ததோடு, இரு கைகளும், கால்களும் செயலிழந்தன. மூச்சுத்திணறலுக்காக அவருக்கு வெண்டிலேட்டா் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது தெரியாமல் அவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.