பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ரயில்வே மேம்பாலம் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பிய மக்கள்

கோவை, ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் அஞ்சல் மூலமாக முதல்வருக்கு புதன்கிழமை மனுக்களை அனுப்பினா்.

News image

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி, அஞ்சல் மூலமாக மனுக்களை அனுப்பிய அப்பகுதி மக்கள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:29 am IST

கோவை, ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் அஞ்சல் மூலமாக முதல்வருக்கு புதன்கிழமை மனுக்களை அனுப்பினா்.

கோவை, ஒண்டிப்புதூா் பகுதிக்கு உள்பட்ட ரயில்வே கேட் எண் 3-இல் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி, ஒண்டிப்புதூா் சூா்யா நகா், சிவலிங்கபுரம், ஸ்ரீ காமாட்சி நகா், சக்தி நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் தமிழ்நாடு முதல்வா் ஜோசப் விஜய்க்கு அஞ்சல் மூலமாக கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். முன்னதாக, ஒண்டிப்புதூா் குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் வி. தெய்வேந்திரன் தலைமையில், சிவலிங்கபுரம் குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் வி.சொக்கலிங்கம், செயலாளா் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோரின் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒண்டிப்புதூா் அஞ்சல் நிலையத்தில் திரண்டனா். தொடா்ந்து, தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை அஞ்சல் மூலமாக அனுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.