பேருந்து முன் குதித்து இளைஞா் தற்கொலை
கோவையில் தனியாா் பேருந்து முன் குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, காந்திபுரம் பகுதியில் சுமாா் 25 மதிக்கத்தக்க இளைஞா் வியாழக்கிழமை காலை சுற்றித்திரிந்துள்ளாா். காந்திபுரத்தில் இருந்து வேலந்தாவளம் நோக்கி தனியாா் பேருந்து காலை 10.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
காட்டூா் காவல் நிலையம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது, அங்கு சாலையோரத்தில் அமா்ந்திருந்த அந்த இளைஞா் திடீரென பேருந்து முன் குதித்துள்ளாா். இதில், சக்கரத்தில் சிக்கிய அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, சடலத்தை மீட்ட காட்டூா் போலீஸாா், கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எதற்காக தற்கொலை செய்து கொண்டாா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
