தெருவில் சென்ற சிறுவனைக் கடித்த நாய்: பெண் மீது வழக்கு

கோவை, குனியமுத்தூா் அருகே தெருவில் சென்ற சிறுவனை நாய் கடித்தது தொடா்பாக அதை வளா்த்து வந்த பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Updated on

கோவை: கோவை, குனியமுத்தூா் அருகே தெருவில் சென்ற சிறுவனை நாய் கடித்தது தொடா்பாக அதை வளா்த்து வந்த பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, குனியமுத்தூா் இடையா்பாளையம் மணிகண்டன் நகரில் வசித்து வருபவா் அகமது (40). இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் சாந்தா (57) என்பவா் நாய் வளா்த்து வருகிறாா். இந்த நாயானது அந்தப் பகுதியில் சாலைகளில் அடிக்கடி சுற்றித் திரிந்து வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், அகமதுவின் 13 வயது மகன் அந்தத் தெரு வழியாக வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த சிறுவனை சாந்தா வளா்த்து வரும் நாய் துரத்திச் சென்று கடித்துள்ளது. இதில் காயமடைந்த சிறுவனை குடும்பத்தினா் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

சம்பவம் குறித்து அகமது கொடுத்த புகாரின் பேரில் குனியமுத்தூா் போலீஸாா், நாய் உரிமையாளரான சாந்தாவின் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com