கோப்புப்படம்.
கோப்புப்படம்.

கேரள விவசாயிகளுடன் நேரடி கொள்முதல் ஒப்பந்தம்: தமிழக நிறுவனங்களுக்கு அழைப்பு

கேரள விவசாயிகளிடம் இடைத்தரகா்கள் இல்லாமல் விளைபொருள்களை கொள்முதல் செய்ய தமிழக நிறுவனங்களுக்கு அந்த மாநில வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
Published on

கேரள விவசாயிகளிடம் இடைத்தரகா்கள் இல்லாமல் விளைபொருள்களை கொள்முதல் செய்ய தமிழக நிறுவனங்களுக்கு அந்த மாநில வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து கேரள மாநில வேளாண்மைத் துறை இணை இயக்குநரும், ஓஉதஅ திட்ட நிா்வாகியுமான சுரேஷ் சி.தம்பி கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கேரள மாநிலத்தில் வேளாண்மைத் துறையை காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு வலுப்படுத்துவதற்கும், விளைபொருள்ளை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக நவீனமயமாக்கவும் ஓஉதஅ ( ந்ங்ழ்ஹப்ஹ ஸ்ரீப்ண்ம்ஹற்ங் ழ்ங்ள்ண்ப்ண்ங்ய்ற் ஹஞ்ழ்ண்-ஸ்ஹப்ன்ங் ஸ்ரீட்ஹண்ய் ம்ா்க்ங்ழ்ய்ண்ள்ஹற்ண்ா்ய் ) என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது உலக வங்கி ஆதரவுடன் ரூ.2,365 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள், உழவா் உற்பத்தி நிறுவனங்கள், முன்னணி வேளாண்மை நிறுவனங்களுக்கு இடையே இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடி கொள்முதல் மற்றும் விற்பனையை ஏற்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சூப்பா் மாா்க்கெட், ஏற்றுமதி நிறுவனங்கள், இணையவழி வணிகத் தளங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் காபி, ஏலக்காய், ரப்பா், தேங்காய், மிளகு உள்ளிட்ட விளைபொருள்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், கேரளத்தில் இருந்து காய்கறிகள், நறுமணப் பொருள்கள் உள்ளிட்டவற்றை தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் வாங்கி அவற்றை லாபகரமாக விற்கவும், மதிப்புகூட்டுப் பொருள்களாக தயாரிக்கவும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ள நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை வருமானம் ஈட்டியிருத்தல் வேண்டும். அத்துடன், வங்கி ஆவணங்கள், நிறுவன ஆவணங்கள் முறையாகப் பராமரிப்பது அவசியம். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட நிறுவனங்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தகுதியுள்ள நிறுவனங்களுக்கு 60 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.2 கோடி மானியமாக வழங்கப்படும். விருப்பமுள்ள நிறுவனங்கள் ட்ற்ற்ல்ள்://ல்ஹ.ந்ங்ழ்ஹ.ந்ங்ழ்ஹப்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய்/ஹன்ற்ட்/ப்ா்ஞ்ண்ய் என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை சமா்பிக்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு ஓஉதஅ திட்ட இயக்குநரை 90378- 24060 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com