கரூா் ரயில் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூரில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஜூலை 7-ஆம் தேதி திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி-பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில், அன்றைய தினம் கரூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு பாலக்காடு புறப்பட்டுச் செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









