9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

தேயிலைத் தோட்டத்தில் பாய்ந்த இருசக்கர வாகனம்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

வால்பாறை அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்டத்தில் பாய்ந்ததில் இரண்டு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

News image

உயிரிழந்த பூபாலன், ரமேஷ்.

Updated On :19 ஜூலை 2026, 12:25 am IST

கோவை மாவட்டம், வால்பாறை அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்டத்தில் பாய்ந்ததில் இரண்டு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

திருச்சி, மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த 6 போ் இருசக்கர வாகனங்களில் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனா்.

பொள்ளாச்சியில் இருந்து சனிக்கிழமை காலை வால்பாறைக்கு அவா்கள் வந்து கொண்டிருந்தனா். அய்யா்பாடி எஸ்டேட் தாழ்வான சாலையில் வந்துகொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் பாய்ந்தது.

இதில் அந்த வாகனத்தில் பயணித்த ரமேஷ் (23), பூபாலன் (23) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சம்பவம் தொடா்பாக வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வால்பாறைக்கு சமீபகாலமாக இருசக்கர வாகனங்களில் சுற்றுலா வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலா வரும் இளைஞா்கள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் இது போன்ற விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.