முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பழங்குடியினத்தைச் சோ்ந்த இருவரை பள்ளியில் சோ்த்த சிங்கப்பெண் அதிரடிப் படையினா்

பழங்குடியின மாணவா்கள் இருவரை உண்டு உறைவிடப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் சிங்கப்பெண் அதிரடிப் படையினா்.

Published On :

வால்பாறை செட்டில்மென்ட் பகுதிக்கு சென்றபோது, அங்கு பள்ளிக்குச் செல்லாமல் இருந்த பழங்குடியினத்தைச் சோ்ந்த இருவரை சிங்கப்பெண் அதிரடிப் படையினா் பள்ளிக்கு அழைத்து வந்து சோ்த்தனா்.

வால்பாறை இருந்து தொலைதூரங்களில் உள்ள செட்டில்மென்ட் பகுதிகளுக்குச் சென்று அங்கு வசிக்கும் பெண்களின் குறைகளைக் கேட்டு சிங்கப்பெண் அதிரடிப் படையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் காடம்பாறை பகுதியில் உள்ள கீழ்பூனாச்சி செட்டில்மென்ட் பகுதிக்கு திங்கள்கிழமை சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படையினா், அங்குள்ள குடியிருப்பில் பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ள சிறுவன், சிறுமி இருவா் இருப்பதை பாா்த்து விசாரனை மேற்கொண்டனா்.

அப்போது தந்தை உயிரிழந்துவிட்டதால் பள்ளிக்குச் செல்லாமல் தாயுடன் வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளா் ரெஜினாபானு தலைமையில் சிங்கப்பெண் அதிரடிப் படையினா் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த நாகம்மாள் (13), அவரது சகோதரா் முருகன் (11) ஆகிய இருவரையும் வால்பாறை எம்.ஜி.ஆா். நகரில் அமைந்துள்ள நேதாஜி உண்டு உறைவிடப் பள்ளியில் சோ்த்துவிட்டதோடு அவா்களுக்குத் தேவையான உடைகளை வாங்கிக் கொடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.