ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கோவை விமான நிலைய பகுதியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை!

கோவை விமான நிலைய பகுதியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை..

கோவை விமான நிலையம் - கோப்புப் படம்

Published On :

இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை (ஜூலை 22) கோவை மாநகருக்கு வருவதையொட்டி, கோவை விமான நிலையம் உள்ளிட்ட சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் 48 மணி நேரம் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை (ஜூலை 22) கோவை மாநகருக்கு வருவதையொட்டி, கோவை உப்பிலிபாளையம், ரேஸ்கோா்ஸ், அவிநாசி சாலை, லட்சுமி மில், ஜிகேஎன்எம் மருத்துவமனை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சிட்ரா, நேரு நகா், காளப்பட்டி, சின்னியம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) முற்பகல் 11 மணி முதல் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளில் அனைத்து ஆளில்லா வான்வழி வாகனம் மற்றும் ஆளில்லா விமான அமைப்புகள், ட்ரோன்கள் ஆகியவற்றை இயக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த விதிமுறையை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.