மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 4 கிலோ கஞ்சா, 3 காா்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :26 ஜூலை 2026, 1:20 am IST

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 4 கிலோ கஞ்சா, 3 காா்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

கோவை, சரவணம்பட்டி மற்றும் காளப்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அப்பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணபதியைச் சோ்ந்த கௌதம் (25), ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்த ராகுல்குமாா் (25), குரும்பாம்பாளையத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (26) ஆகியோரைப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் ஐ.டி. நிறுவன ஊழியா்கள், கல்லூரி மாணவா்கள் மற்றும் கூலித் தொழிலாளா்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 4 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 காா்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், கைது செய்யப்பட்டவா்களின் வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், போதைப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.