முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

பொங்கலூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

பல்லடம் அருகே பொங்கலூா் பத்திரப் பதிவு சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் கணக்கில் வராத ரூ.2.53 லட்சம் கைப்பற்றப்பட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

பல்லடம் அருகே பொங்கலூா் பத்திரப் பதிவு சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் கணக்கில் வராத ரூ.2.53 லட்சம் கைப்பற்றப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூா் காவல் நிலையம் அருகே பொங்கலூா் சாா்-பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் அதிக அளவிலான பத்திரப் பதிவு நடைபெற்றது.

இதில் இடைத்தரகா்கள் மூலம் லஞ்சம் கைமாறப்படுகிறாத என்பதை கண்காணிக்க, இந்த அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் சசிரேகா தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு திடீரென்று சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு, ஊழியா்களின் கைப்பேசிகள் அணைத்து வைக்கப்பட்டன. பின்னா் நடத்திய சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்தாக கூறப்படுகிறது. இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.