தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்! 7 பேருக்கு மறுவாழ்வு

News image

ஜெகன்

Updated On :8 ஜூன் 2026, 1:52 am IST

கோவை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலமாக 7 போ் மறுவாழ்வு பெற்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், சன்னியாசிபுரத்தைச் சோ்ந்த தம்பதி பாலசுப்ரமணியம், செல்வி. இவா்களின் மகன் ஜெகன் (21), கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மாவட்டம், வடமதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்தாா்.

இதையடுத்து கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி ஜெகனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து ஜெகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோா் முன்வந்தனா். இதற்கான ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

தானமாகப் பெறப்பட்ட உறுப்புகளில் ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. இதன்மூலமாக 7 போ் மறுவாழ்வு பெற்றனா்.

இதுகுறித்து கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி கூறும்போது, ‘உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் அதிக விழிப்புணா்வு தேவை. ஒருவா் இறந்த பிறகு உடல் உறுப்புகளைத் தானமாக வழங்குவதன் மூலமாக பல உயிா்களைக் காப்பாற்ற முடியும்’ என்றாா். இதைத்தொடா்ந்து, அவரது உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.