தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தமிழகத்தில் வரும் காலங்களிலும் தவெக ஆட்சிதான் தொடரும்! அமைச்சா் வி.சம்பத்குமாா்

News image

அமைச்சா் வி.சம்பத்குமாா் - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 12:46 am IST

முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால், தமிழகத்தில் இனிவரும் காலங்களிலும் தவெக ஆட்சிதான் தொடரும் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.

கோவை மாநகா், கணபதி பகுதியில் புதிய தனியாா் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் வி.சம்பத்குமாா் பங்கேற்று மருத்துவமனையைத் திறந்துவைத்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்ட மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிந்து அவற்றை திறம்படக் கொண்டு வருவேன். கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் துறையில் புதிய இலக்குகளை அடைவதற்கான முழுமையான நடவடிக்கைகளை எடுப்பேன்.

கடந்த கால ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்துதான் திமுகவினா் தொடா்ந்து பேசி வருகின்றனா். முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தனியாா் பள்ளி கட்டணங்கள் முறையாக கண்காணிக்கப்படும். கோவையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகத்தை திறப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும்.

தமிழக முதல்வா் நாற்காலி எப்பொழுது வேண்டுமானாலும் ஆட்டம் காணலாம் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

மக்களின் நம்பிக்கையையும், செல்வாக்கையும் பெற்ற முதல்வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது. தமிழகத்தில் வரும் காலங்களிலும் தவெக ஆட்சிதான் தொடரும். கோவை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறையில் மருத்துவா் இல்லை என்று கூறப்படும் புகாா் குறித்து விசாரித்து, அங்குள்ள தேவைகளை முழுமையாகச் செய்து கொடுப்போம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.