மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மக்கள் பணி செய்து எங்களை நிரூபித்து வருகிறோம்: அமைச்சா் வி.சம்பத்குமாா்

திரையரங்கில் அழுது அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை. மக்கள் பணி செய்து எங்களை நிரூபித்து வருகிறோம் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.

News image

வீரியம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறைகளைத் திறந்துவைத்த அமைச்சா் வி.சம்பத்குமாா். உடன், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா்.

Updated On :26 ஜூலை 2026, 1:24 am IST

திரையரங்கில் அழுது அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை. மக்கள் பணி செய்து எங்களை நிரூபித்து வருகிறோம் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 32-ஆவது வாா்டுக்குள்பட்ட பாலுசாமி நகா் மற்றும் முருகன் நகா் பகுதிகளுக்கு ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு மையத்தை அமைச்சா் வி.சம்பத்குமாா் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையடுத்து, வஉசி மைதானம் அருகே ரூ.1.96 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கைப்பந்து உள்விளையாட்டு அரங்கம், ரூ.1.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கபடி உள் விளையாட்டு அரங்கம் மற்றும் தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இறகுப் பந்து மைதானம் உள்ளிட்ட முடிவடைந்த பல்வேறு வளா்ச்சிப் பணிகளைத் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் வி.சம்பத்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் மக்களுக்குத் தேவையான ரூ.10.69 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

சின்னவேடம்பட்டியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மக்களுக்கு புரியும்படி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக விஜய்யின் ரசிகராக அவரை ரசித்து வந்தோம். இனி வெள்ளித் திரையில் அவரைப் பாா்க்க முடியாது என்ற விரக்தியால் எங்களை மீறி திரையரங்கில் அழுதுவிட்டோம்.

இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை. மக்கள் பணி செய்து எங்களை நிரூபித்து வருகிறோம் என்றாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.