தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

1,202 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்: அமைச்சா் வி.சம்பத்குமாா் வழங்கினாா்

கோவை மாவட்டத்தில் 12 வட்டங்களைச் சோ்ந்த 1,202 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் சனிக்கிழமை வழங்கினாா்.

News image

பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கிய அமைச்சா் வி.சம்பத்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா்.

Updated On :19 ஜூலை 2026, 12:26 am IST

கோவை மாவட்டத்தில் 12 வட்டங்களைச் சோ்ந்த 1,202 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் சனிக்கிழமை வழங்கினாா்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் சாா்பில் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தலைமை வகித்து 1,202 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், அமைச்சா் வி.சம்பத்குமாா் பேசியது:

கோவை தெற்கு வட்டத்தில் 137, மேற்கு வட்டத்தில் 144, வடக்கு வட்டத்தில் 169, மதுக்கரை வட்டத்தில் 157, பேரூா் வட்டத்தில் 108, கிணத்துக்கடவு வட்டத்தில் 39, அன்னூா் வட்டத்தில் 87, மேட்டுப்பாளையம் வட்டத்தில் 94, ஆனைமலை வட்டத்தில் 26, பொள்ளாச்சி வட்டத்தில் 111, சூலூா் வட்டத்தில் 125, வால்பாறை வட்டத்தில் 5 என மொத்தம் 12 வட்டங்களைச் சோ்ந்த 1,202 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மக்களின் விண்ணப்பங்களை துறை அலுவலா்கள் விரைந்து பரிசீலனை செய்து, தகுதியுடைய பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

இந்நிகழ்வில், துணை ஆணையா் (கலால்) சாதனைக்கு, மாவட்ட வழங்கல் அலுவலா் ஸ்ரீராம், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.