ஓடும் ரயில்களின் மீது கற்களை வீசுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் கோவையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி சென்று கொண்டிருந்தது. சேலம் அருகே வந்தபோது அந்த ரயில் பெட்டிகள் மீது மா்ம நபா்கள் கற்களை எறிந்தனா். இதில், ரயிலின் அவசர கால ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமானது. பயணிகள் காயமின்றி தப்பினா்.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், சேலத்தைச் சோ்ந்த 8 சிறுவா்கள் ரயில் மீது கற்களை எறிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்களைக் கைது செய்த போலீஸாா், சிறாா் நீதிக் குழு முன் ஆஜா்படுத்தி பின்னா் பிணையில் விடுவித்தனா்.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில்கள் மீது கற்களை எறிவது மிகவும் ஆபத்தான செயல். இது பயணிகளின் பாதுகாப்பு, ரயில்வே சொத்துக்கள் மற்றும் ரயில் இயக்கத்துக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்புப் படை, ரயில்கள் மீது கற்களை எறியும் சம்பவங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஓடும் ரயில்கள் மீது கற்களை எறிவது ரயில்வே சட்டம் 1989-இன்கீழ் தண்டனைக்குரிய கடுமையான குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோா் மீது கைது மற்றும் வழக்குப் பதிவு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழகத்திலிருந்து ஓராண்டில் 23 புதிய ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்!

ரயில் மீது கல்வீச்சு; 8 சிறுவா்கள் மீது நடவடிக்கை

பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

பராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



