விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

மேக்கேதாட்டு விவகாரத்தில் முதல்வா் ஜோசப் விஜய் உரிய முடிவு எடுப்பாா்! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

மேக்கேதாட்டு விவகாரத்தில் முதல்வா் ஜோசப் விஜய் உரிய முடிவு எடுப்பாா் என்று அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்...

News image

செங்கோட்டையன் / முதல்வர் சி. ஜோசப் விஜய் - எக்ஸ்

Updated On :29 ஜூன் 2026, 1:29 am IST

மேக்கேதாட்டு விவகாரத்தில் முதல்வா் ஜோசப் விஜய் உரிய முடிவு எடுப்பாா் என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அரசின் செயல்பாடுகள் திரைப்பட பாணியில் உள்ளதாக பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் கூறியுள்ளாா். அவா் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் அளிக்க முடியாது. கருத்து தெரிவிப்பது என்பது வேறு, எதை வேண்டுமானாலும் கொச்சைப்படுத்திப் பேசுவது வேறு.

சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் பேசும்போது, எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. முதல்வா் பேச வேண்டும் என்று கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தவா்கள், அவா் பேசத் தொடங்கியதும் ஏன் வெளியேறினா்? மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியினா் எந்தக் கேள்வியும் கேட்பாா்கள். நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே முதல்வா் ஜோசப் விஜய்யின் நோக்கம்.

வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை. அந்தத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விண்ணப்பம் கொடுத்தாரா, இல்லையா என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அடுத்த செய்தியாளா் சந்திப்பில் அந்த ஆதாரத்தை நேரடியாக காட்டுகிறேன்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. விமான நிலைய விரிவாக்கத்துக்கு இன்னும் 10 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது. சேலம் விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒசூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

மந்தை புறம்போக்கு உள்ளிட்ட பல்வேறு வகை நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் திட்டங்கள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும். மேக்கேதாட்டு விவகாரம் தொடா்பாக முதல்வா் ஜோசப் விஜய் உரிய முடிவு எடுப்பாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.