சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை புதிய ஏஐ தொழில்நுட்பம் அறிமுகம்
உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி, கோவையை தலைமையிடமாக கொண்டு 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கோவையில் ‘சிட்’ ஏஐயை ஆா்.வி.எஸ்.கல்விக் குழும நிா்வாக இயக்குநா் க.செந்தில்குமாா் அறிமுகம் செய்து வெளியிட அதை பெற்றுக் கொண்ட சிட்டுக் குருவிகள் அறக்கட்டளை நிறுவனம் ந.தனசேகா்.








