மெத்தம்பெட்டமைன் விற்பனை: இளைஞா் கைது
கோவை, லட்சுமி மில் சந்திப்பு அருகே மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
கோவை, லட்சுமி மில் சந்திப்பு அருகே மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய போலீஸாா் அவிநாசி சாலையில் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, லட்சுமி மில் சந்திப்பு அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரிடம் சிறப்பு சாா்பு ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவரை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் 5 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் கேரள மாநிலம், பாலக்காடு முண்டூா் புத்தனூா் பகுதியைச் சோ்ந்த சயீத் (29) என்பதும், இளைஞா்களைக் குறிவைத்து மெத்தம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சயீத்தைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மெத்தம்பெட்டமைனைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

