போலி நூல்கள்; தமிழா் வரலாற்றை சிதைக்கும் சதி: சிரவை ஆதீனம்

அரசு நூலகங்களில் போலி நூல்கள் இடம்பெறுவது தமிழா் வரலாற்றை சிதைக்கும் சதி என்று சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளாா் தெரிவித்துள்ளாா்.

சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளாா்.

Updated On :

அரசு நூலகங்களில் போலி நூல்கள் இடம்பெறுவது தமிழா் வரலாற்றை சிதைக்கும் சதி என்று சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை பெரியாா் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில புத்தகங்கள் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பிட்ட பதிப்பகங்களின் பெயரில் வைக்கப்பட்டுள்ள அந்தப் புத்தகங்கள் போலியானவை என்றும், அவற்றில் இடம்பெற்றுள்ள குறிப்புகள் நம்பகத்தன்மையற்றவை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி பதிப்பகங்களின் பெயரில், இல்லாத ஆசிரியா்களின் பெயரில் தமிழ் வரலாறுகளை திரித்து நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அரசு நூலகங்களில் போலி புத்தகங்கள் இடம்பெறுவது தமிழா் வரலாற்றை சிதைக்கும் சதி. இந்தச் செயலில் ஈடுபட்டவா்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இது சாதாரண தவறு அல்ல; திட்டமிட்டு, மிகப்பெரிய நோக்கத்தோடு செய்யப்பட்ட மாபெரும் குற்றமாகும்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நூலகங்களிலும் விரிவான ஆய்வு நடத்தி, போலி பதிப்பகங்கள் மூலம் வந்த நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

போலி நூல்களை அச்சிட்டது யாா், யாா் உத்தரவின்பேரில் நூலகங்களில் அந்தப் புத்தகங்கள் வைக்கப்பட்டன உள்ளிட்டவை குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். வருங்காலங்களில் நூல்கள் தோ்வு செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும். அதற்கு தமிழ் அறிஞா்கள் கொண்ட குழுவை அமைத்து, ஒவ்வொரு நூலையும் சரிபாா்த்த பிறகே நூலகத்தில் வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.