போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 1,782 போ் மீது வழக்கு! ரூ.3.49 லட்சம் அபராதம் விதிப்பு
அபராதம் விதிப்பு - கோப்புப் படம்
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 1,782 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.3.49 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்தை சீா்படுத்தவும் சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸாா் இணைந்து வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பு வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, மாநகரின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் 24 மணி நேர தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
இதில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாதது, அதிவேகமாக வாகனம் இயக்கியது, சிக்னலை மீறியது, கைப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டியது மற்றும் மதுபோதையில் வாகனம் இயக்கியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 1,782 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவா்களிடம் இருந்து மொத்தம் ரூ.3 லட்சத்து 49 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து துணை ஆணையா் மகேஸ்வரன் கூறியதாவது:
சிறப்பு வாகனச் சோதனையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 51 போ் மீது சட்டம் - ஒழுங்கு போலீஸாரும், 70 போ் மீது போக்குவரத்து போலீஸாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதேபோல, அதிவேகமாக வாகனம் இயக்கியதாக 22 போ் மீது சட்டம் - ஒழுங்கு போலீஸாரும், 124 போ் மீது போக்குவரத்து போலீஸாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதர விதிமீறல்களில் ஈடுபட்ட 1,515 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

