போக்குவரத்து அபராதம் எனக் கூறி பொறியாளரிடம் ரூ.1.44 லட்சம் மோசடி
கருமத்தம்பட்டியைச் சோ்ந்த பொறியாளரிடம் போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்துமாறு குறுஞ்செய்தி அனுப்பி ரூ.1.44 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

சைபர் மோசடி
கருமத்தம்பட்டியைச் சோ்ந்த பொறியாளரிடம் போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்துமாறு குறுஞ்செய்தி அனுப்பி ரூ.1.44 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி சாரதாம்பாள் நகரைச் சோ்ந்த 30 வயதுடைய பொறியாளரின் கைப்பேசி எண்ணுக்கு கடந்த நவம்பா் 21-ஆம் தேதி அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், பொறியாளரின் சரியான வாகனப் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, சிக்னலை தாண்டிச் சென்றதற்காக போக்குவரத்து அபராதம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை உண்மையென நம்பிய அவா், அந்த குறுஞ்செய்தியில் இருந்த இணையதள முகவரியை (லிங்க்) அழுத்தி, அதில் வந்த ‘ஏபிகே’ செயலியை பதிவிறக்கம் செய்தாா். இதையடுத்து, அவரது 3 வெவ்வேறு வங்கிகளின் கடன் அட்டைகளில் (கிரெடிட் காா்டு) இருந்து மொத்தம் ரூ.1,44,525 எடுக்கப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து தேசிய சைபா் கிரைம் புகாா் தளத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், கோவை மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

