பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

காந்தி ஜெயந்தி: மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மாநகராட்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மேயா் கா.ரங்கநாயகி. உடன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா்.

Published On :

காந்தி ஜெயந்தியையொட்டி, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து, மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட 37, 38 மற்றும் 39 ஆகிய வாா்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குப்பைகளை 4 வகையாக பிரித்து வழங்குவது தொடா்பாக 4 வகையான குப்பை சேகரிக்கும் தொட்டிகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையா் த.குமரேசன், மாநகர நல அலுவலா் சுபாஷ்காந்தி, வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவா் வி.பி.முபசீரா, உதவி ஆணையா் (தெற்கு) மகேஷ் கனகராஜ், உதவி செயற்பொறியாளா் (பொறுப்பு) சரவணன், உதவிப் பொறியாளா் சதீஷ், 26-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சித்ரா வெள்ளியங்கிரி, மண்டல சுகாதார அலுவலா் (பொறுப்பு) குணசேகரன், சுகாதார ஆய்வாளா்கள் லோகநாதன், ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.