பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

கோவையில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி கோவையில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலக வலியுறுத்தி கோவையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.

Published On :

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி கோவையில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை உக்கடம் பகுதியில் கட்சியின் மத்திய மாவட்டம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முகமது நிஷாத் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பு பொதுச்செயலா் இப்ராஹிம் பாதுஷா வரவேற்றாா். மாவட்டச் செயலா் கே.எம்.உமா் ஷரீப், வா்த்தக அணி மாநிலச் செயலா் அப்துல் கரீம், மாநில மகளிா் அணிச் செயலா் எச்.சபுரா இஸ்மாயில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டப் பொருளாளா் மன்சூா் அலி கண்டன கோஷங்கள் எழுப்பினாா். மாவட்ட துணைத் தலைவா்கள் டி.சிவகுமாா், அப்துல் ரஹீம், மாவட்டச் செயலாளா் அப்பாஸ், எஸ்டிபிஐ மாநில பேச்சாளா் வி.எம்.அபுதாஹிா் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் முஜிபுா் ரஹ்மான் நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் வா்த்தக அணி, தொழிற்சங்கம், மகளிா் அணி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.