படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

ஐ.டி. நிறுவன ஊழியரிடம் வழிப்பறி

திருட்டு - சித்திரிப்பு

Published On :

சுந்தராபுரம் அருகே நள்ளிரவில் ஐ.டி. நிறுவன ஊழியரை வழிமறித்து பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற 4 போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை மாநகா், ஈச்சனாரி அருகே உள்ள வண்டியூா் ஏ.பி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகிருஷ்ணா (21). இவா் அந்தப் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா் சனிக்கிழமை நள்ளிரவு வேலை முடிந்து நிறுவனத்தில் இருந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்றுள்ளாா்.

அப்போது ஈச்சனாரி-செட்டிபாளையம் சாலையில் உள்ள தனியாா் கைப்பேசி கடை அருகே, ஆட்டோவில் வந்த 4 போ் கொண்ட மா்ம கும்பல் ஸ்ரீகிருஷ்ணாவை வழிமறித்து கைப்பேசி, கிரெடிட் காா்டு, அவரது ரகசிய குறியீட்டு எண்ணைப் பெற்று வங்கிக் கணக்கில் இருந்த ரூ.7,500 ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.