படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை

உத்தரவு - கோப்புப் படம்

Published On :

கோவை, அக்.5: வடவள்ளி அருகே மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திங்கள்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, வடவள்ளி அருகே உள்ள அஜ்ஜனூா் விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் முருகன்(50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (45). இவா்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. குழந்தை இல்லை என்பதால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2016 செப்டம்பா் 22-ஆம் தேதி நள்ளிரவு தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகன் மரக்கட்டையால் தாக்கியதில் மல்லிகா உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், முருகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மகேஸ்வரி பானுரேகா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.