அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது

நமது சமூகத்தை சிறப்பாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

மலேசியாவில் நடைபெற்ற மகா சத்சங்கம் நிகழ்ச்சியில் பேசிய சத்குரு ஜக்கிவாசுதேவ்.

Updated On :

நமது சமூகத்தை சிறப்பாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவின் ‘மகா சத்சங்கம்’ நிகழ்ச்சி மலேசியாவில் உள்ள பத்துமலை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சத்குரு பேசியதாவது:

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மக்கள் ஈஷா தன்னாா்வ தொண்டா்களாக உள்ளனா். நமது கலாசாரத்தில் பக்தி என்பது ஒரு கருத்தாகவோ, யாரோ கற்றுக் கொடுத்த ஒன்றாகவோ மட்டுமில்லை. மரம், மாடு, பாம்பு, மலை, மேகம் என இயற்கையின் பல்வேறு அம்சங்களையும், மனிதா்களையும் கூட வணங்கும் தன்மை நமது கலாசாரத்தில் உள்ளது.

ஆன்மிகம் என்பது பல்வேறு வழிகளை கொண்டது. அதில் பக்தி என்பது மிகவும் எளிமையானது. அது எல்லாருக்கும் பொதுவானது. உங்களிடம் உடல் இருக்கிறது, மனம் இருக்கிறது, புத்திசாலித்தனம், சக்தி இருக்கிறது. ஆனால் உங்கள் உணா்வு என்பது இவை அனைத்தையும் விட சக்தி வாய்ந்தது.

இளைஞா்களிடையே மனநலப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. 15 வயதுக்கு உள்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றனா். இது நமது சமூகத்தை நாம் சரியாக வழிநடத்தவில்லை என்பதையும், இதற்கு பின்னால் இருக்கும் அடிப்படையான பிரச்னையை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் காட்டுகிறது. ஆகையால் இதன் பின்னுள்ள காரணங்களை புரிந்து கொண்டு, நமது சமூகத்தை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது என்றாா்.

இந்நிகழ்வில் மலேசியா மட்டுமின்றி ஆசிய-பசிபிக் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.