தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

கொலை வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போத்தனூா் பகுதியில் முன்விரோதத் தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் மற்றொரு இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை சிறாா் நீதித் துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Published On :

போத்தனூா் பகுதியில் முன்விரோதத் தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் மற்றொரு இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை சிறாா் நீதித் துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாநகா், போத்தனூா் கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் விஷ்ணு (20). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் சதீஷுக்கும் (21) இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதுதொடா்பாக கடந்த 9.2.2019-இல் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, விஷ்ணுவை உடைந்த மதுப் பாட்டிலால் சதீஷ் குத்திக் கொலை செய்தாா். இதுதொடா்பாக சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்தக் கொலை சம்பவம் நடைபெற்றபோது சதீஷ் சிறாா் என்பதால், கோவை சிறாா் நீதித் துறை நடுவா் மன்றம் முன் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் கூா்நோக்கு இல்லத்தில் அவா் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.அருண்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.