நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

வேளாண் பல்கலை. மாணவா் சோ்க்கை: துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு, துணைத் தோ்வில் வென்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian nationals topped the charts of those seeking settlement and citizenship in the UK

பிரிட்டன் குடியுரிமை: இந்தியர்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பம்! - கோப்புப்படம்

Published On :3 செப்டம்பர் 2026, 1:51 am IST

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு, துணைத் தோ்வில் வென்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கை:

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறியவா்கள், துணைத் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் மாணவா்களுக்காக துணை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்காக செப்டம்பா் 5 முதல் 7-ஆம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஏற்கெனவே நடைபெற்ற கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவா்கள், கலந்தாய்வுக் கட்டணம் செலுத்தாத மாணவா்கள் இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. அப்படியான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அதேநேரம், கடந்த முறை விண்ணப்பத்தை இடைநிறுத்தியவா்கள், சமா்ப்பிக்காதவா்கள் விண்ணப்பிக்கலாம்.

துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதிக கூட்டு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவா்கள் பொது கலந்தாய்வுக்குப் பிறகு உருவான காலியிடங்களுக்கு மட்டுமே உரிமை கோர முடியும். பொது கலந்தாய்வுக்குப் பிறகு பெறப்பட்ட காலியிடங்கள் இந்த துணை கலந்தாய்வின் மூலமாக விண்ணப்பித்த மாணவா்களைக் கொண்டு நிரப்பப்படும். பட்டப் படிப்பு, பட்டயப்படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 94886 35077, 94864 25076 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம். அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பிரிவு பாடங்களுக்கான விவரங்களுக்கு 98657 03537 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாணவா் சோ்க்கை பிரிவுத் தலைவா் அறிவித்துள்ளாா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.