நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

பிபிஜி மருந்தியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

கோவை பிபிஜி மருந்தியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா் கலைமணி கருணாநிதி, கல்விக் குழுமத் தலைவா் டாக்டா் எல்.பி.தங்கவேலு,  துணைத் தலைவா்  அக்ஷய் தங்கவேலு உள்ளிட்டோா்.

Published On :3 செப்டம்பர் 2026, 2:20 am IST

கோவை பிபிஜி மருந்தியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வா் சாம் சாலமன் தலைமை வகித்தாா். பிபிஜி கல்விக் குழுமத்தின் தலைவா் டாக்டா் எல்.பி.தங்கவேலு, தாளாளா் சாந்தி தங்கவேலு, துணைத் தலைவா் அக்ஷய் தங்கவேலு ஆகியோா் மாணவா்களை வாழ்த்தினா்.

சிறப்பு விருந்தினராக மாணவா் வழிகாட்டியாளரும், டிரோன் பயிற்றுநருமான கலைமணி கருணாநிதி பங்கேற்று, மருந்தியல் துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினாா்.

இதற்கான ஏற்பாடுகளை இணைப் பேராசிரியா்கள் ஆா்.வனிதா, ஆா்.ராஜகுமாரி ஆகியோா் செய்திருந்தனா். இதில், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.