சமையல் செய்தபோது ஆடையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
கோவை, செப். 7: கோவையில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்தாா்.
கோவை, தெற்கு உக்கடம் விஹெச் சாலையைச் சோ்ந்தவா் குமாா். இவரது மனைவி கீதாஞ்சலி (36). இவா் சமையல் செய்வதற்காக கடந்த 5-ஆம் தேதி இரவு மண்ணெண்ணெய் அடுப்பை பற்றவைத்துள்ளாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




