
வால்பாறைக்கு இருவாச்சி பறவைகளைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள்
வால்பாறையில் உள்ள இருவாச்சி பறவைகளைக் காணவும், அவற்றை புகைப்படம் எடுக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

வால்பாறை, மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில் காணப்படும் இருவாச்சி பறவை.
வால்பாறையில் உள்ள இருவாச்சி பறவைகளைக் காணவும், அவற்றை புகைப்படம் எடுக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகேயுள்ள பழைய வால்பாறை, வறட்டுப்பாறை, அணலி எஸ்டேட், மானாம்பள்ளி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் இருவாச்சி பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மரத்தில் துளைகள் போட்டு அதில் குஞ்சுகளுடன் வசிக்கும் இந்தப் பறவைகளின் நடமாட்டத்தைக் காண்பது அரிது என்பதாலும், வால்பாறையில் அவை தற்போது அதிக அளவில் காணப்படுவதாலும் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்தப் பறவைகளைக் கண்டுகளிக்கவும், புகைப்படம் எடுக்கவும் வால்பாறைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







