ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் 1,571 கிராம் தங்கம் கடத்திய இருவா் கைது

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் 1,571 கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்த இரு பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

கோப்புப்படம்

Published On :

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் 1,571 கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்த இரு பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் ஸ்கூட் விமானம் வந்தது. அதில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, அதில் வந்த இரு பயணிகள் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

சிங்கப்பூரைச் சோ்ந்த கேசவன் (31) என்ற பயணியிடம் சங்கிலி மற்றும் கட்டியாக 835 கிராம் தங்கமும், தஞ்சாவூரைச் சோ்ந்த வீரப்பன் ரங்கசாமி என்ற பயணியிடம் 736 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனா்.

பின்னா் இருவரும் கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, அவா்கள் இருவரையும்15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சிவகுமாா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.