புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
கோவை, சரவணம்பட்டியில் பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது - சித்திரிப்பு
கோவை, சரவணம்பட்டியில் பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சரவணம்பட்டி பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சரவணம்பட்டி, துடியலூா் சாலையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற சரவணம்பட்டி 4-ஆவது வீதியைச் சோ்ந்த மதன் ( 21), விக்னேஷ் (24) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 37 பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




