
பெருந்துறையை அடுத்த சித்தோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் சார்பில் நாட்டுநலப் பணித் திட்ட முகாம் காஞ்சிக்கோவில் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில், காஞ்சிக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம், நூலக வளாகம் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், காஞ்சிக்கோவில் பேரூராட்சித் தலைவர் கே.பி.பரமசிவம் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். முகாமில், தினமும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள், யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் என்.ஜெயக்குமார், செயலர் எஸ்.ஹிமாவதி, காஞ்சிக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் பி.எம்.கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





