தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பவானி திருவள்ளுவர் நகரில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி திறப்பு

பவானி நகராட்சி 7-ஆவது வார்டு திருவள்ளுவர் நகரில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 12:03 am

பவானி நகராட்சி 7-ஆவது வார்டு திருவள்ளுவர் நகரில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. 
இப் பகுதியில் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யுமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து ரூ.8.50 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இதை தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார். 
நிகழ்ச்சியில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணராஜ், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச்  செயலர் கே.ஆர்.ஜான், முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள்  எம்.ஆர்.துரை,  என்.ராஜேந்திரன், உறுப்பினர்கள் ஏ.முத்துசாமி, மோகன், ராஜேந்திரன், செல்லப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.