ஈரோடு மாவட்ட எல்லையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வழியனுப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் பெருந்துறை வழியாக கோவைக்கு காரில் சென்றார். பின்னர், கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார். அவருக்கு, ஈரோடு மாவட்ட எல்லையான பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், அதிமுக கட்சியினர் ஆகியோர் பங்கேற்று பூக்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வழியனுப்பி வைத்தனர்.
இதில், பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.பழனிசாமி, ஒன்றியச் செயலாளர் விஜயன், ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் ரவிசந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.