சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

மொடக்குறிச்சியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தொடக்கம்

மொடக்குறிச்சி தாலுகா பகுதியில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி காவல் துறை பாதுகாப்புடன் புதன்கிழமை தொடங்கியது. 

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

மொடக்குறிச்சி தாலுகா பகுதியில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி காவல் துறை பாதுகாப்புடன் புதன்கிழமை தொடங்கியது. 
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக விவசாய நிலங்களில் பவர் கிரிட் நிறுவனம் சார்பில், உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு, அளவீடுகள் நடைபெற்று வந்தது. விவசாயிகள் விவசாய  நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என்றும், தரை வழியாக கேபிள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில், மொடக்குறிச்சியை அடுத்த 60 வேலம்பாளையம் கிராமம், வெள்ளப்பெத்தாம்பாளையம்புதூர் என்ற இடத்தில் அன்னபூரணி  என்ற விவசாயியின் தோட்டத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் புதன்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. பொக்லைன்  இயந்திரம் மூலம் குழிகள் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
இதுகுறித்து, இப்பணிகளைப் பார்வையிட்ட ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் முருகேசன்  கூறியதாவது: 
தற்போது திருப்பூர் மாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யலாற்றங்கரை கொங்குடையாம்பாளையம் முதல் அறச்சலூர், வெள்ளப்பெத்தாம்பாளையம்புதூர் வழியாக மானூர், சாவடிப்பாளையம் புதூர், காவிரி ஆற்றின் கரையையொட்டி உள்ள குறுக்கபாளையம் வரை மொத்தம் 66 உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட  உள்ளன. உயர்மின் கோபுரங்கள் ஒவ்வொன்றும் 800 கே.வி. திறன் கொண்டதாகவும், 52 மீட்டர் உயரம் கொண்டதாகவும் இருக்கும். மேலும், 400 மீட்டர் தொலைவில் ஒரு உயர்மின் கோபுரம் அமையவும் உள்ளது. மேலும்,  உயர்மின் கோபுரம் அமையவுள்ள இடத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு நில மதிப்பீட்டில் 85 சதவீதத் தொகையும், விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரம் ஒன்றுக்கு  வயதுக்கேற்ப அதிகபட்ச தொகையாக ரூ. 32 ஆயிரத்து 400 வரையும், மேலும் பயிரிடப்பட்டுள்ள பயிருக்கேற்பவும் இழப்பீட்டு தொகை கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு  காசோலைகளாக  வழங்கப்பட்டு வருகிறது என்றார். 
இப்பணியின்போது, மொடக்குறிச்சி வட்டாட்சியர் அஷ்ரபுனிசா, மண்டலதுணை வட்டாட்சியர் சிவசங்கர், வருவாய் ஆய்வாளர்கள் காயத்ரி (மொடக்குறிச்சி), சண்முகபிரியா (அறச்சலூர்), தோட்டக் கலைத் துறை, பொதுப் பணித் துறை, வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் இருந்தனர்.
பெருந்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில், அறச்சலூர் காவல் ஆய்வாளர் தங்கவேல், சென்னிமலை காவல் ஆய்வாளர் செல்வராஜ், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.