இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விற்பனை தீவிரம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு  ஜவுளிச் சந்தையிலும், சாலையோரக் கடைகளிலும்  விற்பனை களைகட்டி உள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு  ஜவுளிச் சந்தையிலும், சாலையோரக் கடைகளிலும்  விற்பனை களைகட்டி உள்ளது.
ஈரோட்டில் வாரந்தோறும் ஜவுளிச் சந்தை செவ்வாய்க்கிழமை நடைபெறுவது வழக்கம். தீபாவளி பண்டிகைக்குப் பிறகு மந்த நிலையில் இருந்து வந்த ஈரோடு ஜவுளிச் சந்தை,  கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட புத்தாடைகளை வாங்க ஜவுளிக் கடைகளில்  திரண்டு வருகின்றனர்.
ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள ஜவுளிச் சந்தையில் திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகளில் கூடும் வாரச் சந்தையில்  புத்தாடைகளை வாங்க நூற்றுக்கணக்கான  மக்கள் குவிந்தனர். இதனால், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, பிரப் சாலை, மணிக்கூண்டு, பன்னீர் செல்வம் பூங்கா ஆகிய  பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதுகுறித்து, வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
 ஜவுளிச் சந்தையில் 330 நிரந்தரக் கடைகள் உள்பட 740 வாரச் சந்தை கடைகள்  செயல்படுகின்றன.  கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி ஜவுளிச் சந்தையில் மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் இரண்டுமே திருப்திகரமாக இருந்தது. கேரளத்தில் இருந்து அதிக அளவில் மொத்த வியாபாரிகளும், தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். ரெடிமேடு ரகங்கள், பனியன்கள், பெட்ஷீட் உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனையானது. கிறிஸ்துமஸ்  பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாள்களாக விற்பனை அதிகரித்தே  காணப்பட்டது. தற்போது, 60 சதவீதம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.