சித்தோட்டில் 4 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டதாகப் புகார்: மதுபோதை தந்தையால் பரபரப்பு

சித்தோட்டில் மதுபோதையில் தனது 4 வயது ஆண் குழந்தையை அங்கன்வாடி மையத்தில் விட்டது தெரியாமல், மர்ம நபர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக
Updated on
1 min read

சித்தோட்டில் மதுபோதையில் தனது 4 வயது ஆண் குழந்தையை அங்கன்வாடி மையத்தில் விட்டது தெரியாமல், மர்ம நபர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் தெரிவித்த தந்தையால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. 
நாமக்கல் மாவட்டம்,  பள்ளிபாளையம் கணபதி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(38). விசைத்தறி நெசவுத் தொழிலாளியான இவர், சித்தோடு அருகேயுள்ள  வளையக்காரபாளையத்தில் உள்ள விசைத்தறிக் கூடத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உயிரிழந்த நிலையில், 4 வயது மகன் அருணை,  தாய் அலமேலுவின்  பராமரிப்பில் வளர்த்து வருகிறார். 
இந்நிலையில், வேலைக்குப் புறப்பட்ட ராமச்சந்திரன், தனது மகன் அருணையும் உடன்அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தையை விட்டுவிட்டு, மது அருந்தச் சென்ற இவர், போதையில் அப்பகுதியில் படுத்துத் தூங்கியுள்ளார். தூங்கி எழுந்த பின், மது அருந்துவதற்கு முன் என்ன நடந்தது என்பது தெரியாமல் மகனைத் தேடியுள்ளார். 
பலமுறை நினைவுபடுத்திப் பார்த்தும் மகனை எங்கு விட்டுவிட்டு வந்தோம் என்பது நினைவுக்கு வரவில்லை. இதனால், பல்வேறு இடங்களில் தேடியும் மகன் கிடைக்காததால் யாரேனும் போதையில் இருந்தபோது, தனது மகனைக் கடத்திச் சென்றிருக்கலாம் எனக் கருதிய ராமச்சந்திரன் சித்தோடு போலீஸில் புகார் தெரிவித்தார். 
ஆண் குழந்தை காணவில்லை எனத் தகவல் கிடைத்ததால் போலீஸார், அதிர்ச்சி  அடைந்ததோடு தீவிர விசாரணை நடத்தினர். ராமச்சந்திரனிடம் துருவி, துருவி  விசாரிக்கையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது தெரிந்தது. இந்நிலையில்,  அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தையைக் கொண்டுவந்து விசைத்தறிப் பட்டறையில் விட்டு விட்டு தந்தையிடம்தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். 
இந்நிலையில், போலீஸாரும் விசாரணை நடத்தியதால் குழந்தை பத்திரமாக விசைத்தறி றயில் இருப்பது தெரியவந்தது. இதனால், நிம்மதி அடைந்த போலீஸார் குழந்தையை ராமச்சந்திரனிடம் ஒப்படைத்ததோடு, கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு எச்சரித்து அனுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com