மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டியில் சென்னிமலை, கொங்கு பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்தச் சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஈரோடு மாவட்ட தடகளச் சங்கம் சார்பில், 17- ஆவது மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில், மாவட்டத்திலுள்ள 60 பள்ளிகளைச் சேர்ந்த, 1,500 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில், 16,18 வயதுகளுக்கான பிரிவில், சென்னிமலை கொங்கு பள்ளி மாணவர்கள் 15 பேர் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்தச் சாம்பியன் பட்டம் வென்றனர். இப்போட்டியில், முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள், சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான இளையோர் தடகளப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ்குமார், தட்சிணாமூர்த்தி ஆகியோரை பள்ளித் தலைவர் ஆர்.கந்தசாமி, தாளாளர் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளர் என்.டி.ராஜேந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் அசோக் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

13/32: நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 13 அணிகள்!

அசாமில் இருந்து துபை, அபுதாபிக்கு நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

தவெக அரசுக்கு உதவவில்லை! உண்மை என்ன? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

தங்கம் விலை அதிகரிப்பால் இரு மடங்கு உயர்வு... பிஃபா உலகக் கோப்பையின் விலை இவ்வளவா?
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


