திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் மே 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க (ட3, ட4,எஈந) ஊழியர்கள் மே 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் பேராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

News image
Updated On :14 மே 2018, 7:37 pm

DIN

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க (ட3, ட4,எஈந) ஊழியர்கள் மே 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் பேராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, இப்பிரிவு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த தகவல்:
கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனே அமலாக்க வேண்டும்.
எஈந ஊழியர் சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவை வெளியிட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளுக்காக, பி. பாண்டுரங்கராவை பொதுச் செயலராகக் கொண்ட அஐடஉம-எஈந சங்கமானது மே 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. ஏப்ரல் 16, 17, 18, 19 -ஆம் தேதிகளில் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டமும், அதைத் தொடர்ந்து மே 26-இல் தில்லியில் தர்னா உள்பட அனைத்து இயக்கங்களும் நடத்திய பின்பும் அஞ்சல் நிர்வாகமும், அரசாங்கமும் வேண்டுமென்ற காலம் கடத்துவதால், மார்ச் 16, 17-ஆம் தேதி அகில இந்திய மாநாட்டில் எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற போராட்டத்தில் ஈரோடு கோட்டத்திலிருந்து சுமார் 16 தோழர்கள் கலந்துகொண்டனர். ஊழியர்களுக்காக இலாகா ஊழியர்கள் போராடுவதும், இலாக்கா ஊழியர்களுக்காகப் போராடுவதும், சம்மேளனத்தின் பாரம்பரியம், ஜனநாயக அடிப்படையில் இச்சங்கம் மார்ச் மாதத்திலேயே திட்டமிட்டு படிப்படியாக போராடி இறுதியில் வேலைநிறுத்தம் என்று அறிவித்தவுடன் அனைத்துச் சங்கங்களும் இந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளும் என்ற முடிவை எடுத்து மே 7-ஆம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளது.
நீண்டகால தாமதத்தையும் , அரசின் உதாசீனப் போக்கையும் கண்டிக்கும் வகையில், மே 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.