மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குறைகேட்பு முகாமில் ரூ. 75 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை கேட்பு முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ. 75.55 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

Updated On :21 மே 2018, 7:26 pm

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை கேட்பு முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ. 75.55 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் நடைபெற்ற முகாமில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மொத்தம் 280 மனுக்கள் அளிக்கப்பட்டன. அம்மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த அரியப்பம்பாளையத்தைச் சேர்ந்த வீரமணியின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சமும், நீரில் மூழ்கி உயிரிழந்த புன்செய் புளியம்பட்டியைச் சேர்ந்த வேலுசாமியின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரமும், நீரில் மூழ்கி இறந்த கோபி, காசிபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரமும், மாவட்ட
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 7 பேருக்கு ரூ. 65,700-க்கான வங்கி கடன் மானியமும், பேரூராட்சிகள் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் தலா ரூ. 5 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான 10 சரக்கு ஆட்டோக்களும், ரூ. 15 லட்சம் மதிப்பிலான ஒரு லாரி உள்பட மொத்தம் ரூ. 75 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செ.கவிதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) முத்துகுமார், நேர்முக உதவியாளர் (பொ) சி.ஜெயராமன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.