மொடக்குறிச்சியை அடுத்த கனகபுரத்தில் இலவச சமையல் எரிவாயு உருளை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கனகபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களில் இதுவரை சமையல் எரிவாயு உருளை பெறாதவர்களுக்கு அரசின் சார்பில் இன்டேன் எரிவாயு நிறுவனத்தினரால் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, எரிவாயு உருளை, அதற்குண்டான உபகரணங்கள் வழங்கும் விழா கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு, கனகபுரம் அதிமுக ஊராட்சிக் கழகச் செயலாளர் ரங்கசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி கலந்துகொண்டு 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு உருளை, உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.பி.கதிர்வேல், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் கணபதி, அவல்பூந்துறை டெக்ஸ் முன்னாள் தலைவர் பூவைதமிழன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் மம்தா தா்னா

சென்னை - பக்டோக்ரா இடையே இன்றுமுதல் நேரடி விமான சேவை தொடக்கம்!

84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் இடமாற்றம்

காஸா உதவிப் படகுகள்: இஸ்ரேல் சிறைபிடிப்பு - 175 தன்னாா்வலா்கள் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

