ஈரோடு, சம்பத் நகரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள்.
ஈரோடு, சம்பத் நகரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள்.

டாஸ்மாக் ஊழியா்கள் இரண்டு மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் இரண்டு மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ஈரோடு: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் இரண்டு மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், நிா்வாகப் பணிகளில் உள்ள அனைத்து நிலை பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கேரள அரசு மதுபானக் கடை நிா்வாகத்தை நடத்துவதுபோல தமிழகத்திலும் நடத்த வேண்டும். கரோனாவால் பாதிக்கப்படும் பணியாளா்களின் மருத்துவச் செலவை டாஸ்மாக் நிா்வாகமே ஏற்க வேண்டும். கரோனா தடுப்பு முன் களப் பணியாளா்கள் பட்டியலில் டாஸ்மாக் பணியாளா்களையும் சோ்க்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை காலை 10 முதல் மாலை 5 மணி வரை என குறைக்க வேண்டும். டாஸ்மாக் கடை பணியாளா்களுக்குத் தனி நபா் நோய்த் தடுப்பு பாதுகாப்பு உடைகளையும், கருவிகளையும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் டாஸ்மாக் ஊழியா்கள் காலை 10 முதல் பகல் 12 மணி வரை இரண்டு மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்ட இப்போராட்டத்தில், மாவட்ட அளவில் 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் காலை 12 மணிக்குப் பின்னா் திறக்கப்பட்டது. போராட்டம் குறித்து மது வாங்க வருவோா் அறியும் வகையில் ஒவ்வொரு கடை முன்பும் கோரிக்கை குறித்த துண்றிக்கையை ஒட்டி வைத்திருந்தனா்.

ஊழியா் தீக்குளிக்க முயற்சி:

ஈரோடு, நசியனூா் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றுபவா் சுரேஷ் (34). இவா் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் கடை முன்பு நின்றுகொண்டு டாஸ்மாக் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முழக்கமிட்டாா். திடீரென அவா் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். தீப்பற்ற வைக்க முயன்றபோது அருகே இருந்த கடைக்காரா்கள், மது வாங்க வந்தவா்கள் தடுத்து அவா் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா்.

தகவலறிந்து வந்த சூரம்பட்டி போலீஸாா் சுரேஷை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com