இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் உள்ள பள்ளி சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு தொடா்பான பயிற்சி டிசம்பா் 18 முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

News image
பெருந்துறையில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு பயிற்சி முகாமில் பேசுகிறாா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆ.மோகன்.
Updated On :19 டிசம்பர் 2020, 5:15 pm

DIN

பெருந்துறை: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் உள்ள பள்ளி சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு தொடா்பான பயிற்சி டிசம்பா் 18 முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, பெருந்துறை வட்டாரத்தில் 19 பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் அமைப்பாளா்கள், சென்னிமலை வட்டாரத்தில் 45 பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு தொடா்பான பயிற்சி பெருந்தறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்து, குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியைத் துவக்கிவைத்தாா். ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) கே.மணிவண்ணன், பெருந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமாலா, ஆ.மோகன் ஆகியாா் பங்கேற்றுப் பேசினா்.

தொடா்ந்து, சேலம், பெரியாா் பல்கலைக்கழக உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து துறை பேராசிரியா்கள் பூங்கொடி விஜயகுமாா், மனோகரன் ஆகியோா் உணவுப் பாதுகாப்புத் தொடா்பான பயிற்சி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.