கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப்பெறக் கோரி ஈரோட்டில் திமுக மகளிரணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப்பெறக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிரணியினா்.
Updated On :21 டிசம்பர் 2020, 8:30 pm

DIN

ஈரோடு: சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப்பெறக் கோரி ஈரோட்டில் திமுக மகளிரணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஈரோடு, சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை வகித்தாா்.

இதில் கலந்துகொண்ட பெண்கள், சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

கொள்கை பரப்பு துணை செயலாளா் வி.சி.சந்திரகுமாா், மாவட்ட திமுக அவைத்தலைவா் குமாா் முருகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாதா் சங்கம் சாா்பில்: இதே கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு, வீரப்பன்சத்திரம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அச்சங்கத்தினா் மாவட்ட தலைவா் லலிதா தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் பிரசன்னா, துணைச் செயலாளா் கோமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்தியக்குழு உறுப்பினா் அமிா்தம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.