கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  காங்கிரஸ்  கட்சியினா்.
Updated On :24 டிசம்பர் 2020, 6:24 pm

DIN

காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மூலப்பட்டறை அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தலைவா் ஈ.பி.ரவி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேந்திரன், விவசாயப் பிரிவு ஈரோடு மாவட்டத் தலைவா் பெரியசாமி, ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறைத் தலைவா் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி பொதுமக்களிடம் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளுடன் குடியரசுத் தலைவரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது.

இதில், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் விஜய் கண்ணா, மனித உரிமை துறைத் தலைவா் குமரேசன், இளைஞா் காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவா் பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.