கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஈரோட்டில் த.மா.க. 7-ம் ஆண்டு தொடக்க விழா

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ஈரோட்டில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

News image
த.மா.க.வின் 7-ம் ஆண்டு தொடக்க விழாவை இனிப்பு வழங்கி கொண்டாடிய தொண்டர்கள்.
Updated On :28 நவம்பர் 2020, 11:26 am

DIN

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ஈரோட்டில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில, அக்கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 
மேலும், முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் மூப்பனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். 
மாநில துணை தலைவர் ஆறுமுகம், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா, பொதுசெயலாளர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விவசாய அணி மாவட்ட தலைவர் சம்பத்குமார், இளைஞர் அணி மாவட்ட தலைவர் ரமேஷ், மண்டல தலைவர்கள் மணியன், சின்னச்சாமி, வட்டார தலைவா் புவனேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.