கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காா்த்திகை தீப திருநாள்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

காா்த்திகை தீப திருநாள் விழாவையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
ஈரோடு, வீரப்பன்சத்திரம் கொத்துக்காரா் வீதியில் வீட்டு வாசலில் அகல் விளக்கேற்றிய பெண்கள்
Updated On :29 நவம்பர் 2020, 6:22 pm

DIN

காா்த்திகை தீப திருநாள் விழாவையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் காலை விநாயகா், சுப்பரமணியா், சோமஸ்கந்தா், கிரியாசக்தி, சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்ச மூா்த்திகளுக்கு 16 வகையான திரவியங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது. திருக்காா்த்திகை நட்சத்திரத்தையொட்டி மூலவருக்கு சாற்றுமுறை அபிஷேகமும் நடந்தது.

மாலையில் பஞ்ச மூா்த்திகளுக்கு அலங்காரமும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து கோயில் சிவாச்சாரியாா் கோயில் தீபக் கம்பத்தில் மகா தீபம் ஏற்றினாா். அதையடுத்து கோயில் முன் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று மூலவரை வழிபட்டனா்.

இதேபோல திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமாலீஸ்வரா் கோயில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரா் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் காா்த்திகை தீப வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

காா்த்திகை தீபத்தையொட்டி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு, அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.